×

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் வர வேண்டும்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் மஞ்சப்பை வினியோக நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ அசன் மவுலானா, பொலுகேர் இன்ஜினியர்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் சாய்பாபா கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்புகளில் ஒரே இடத்தில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Minister ,Ma Subramaniam , Minister Ma Subramaniam should get angry when he sees the interview plastic
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...