×

சிவகங்கை அருகே புதிய கற்காலத்தை சேர்ந்த உருக்காலை கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே புதுப்பட்டி கண்மாய் பகுதியில் ஆய்வு செய்த பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், சமயக்குமார் ஆகியோர் கூறியதாவது: இப்பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரி கிடைத்துள்ளது. இதை கற்கோடாரி அல்லது செதுக்கு பொருளாகவும் பயன்படுத்தி இருக்கலாம். இப்பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக இரட்டை அடுக்கில் பல முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளது. மேலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. புதிய கற்காலம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1000 வரை என குறிப்பிடுகின்றனர். இப்பகுதியில் கற்கோடாரி, முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துள்ளது. அரசு முறையான அகழ்வாய்வு செய்தால் இப்பகுதியின் பழங்கால வரலாறு தெரிய வரும்.


Tags : Sivagangai , Discovery of Neolithic steel near Sivagangai
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு