போரூரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழப்பு: மருத்துவமனையை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள்

சென்னை: போரூரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழந்ததற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என்று கூறி மருத்துவமனையை பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராக சதீஷ்குமார், வினோதினி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனால் போரூரில் உள்ள பெருநக சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாயநல மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 2 நாட்கள் மருத்துவசிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்ட வினோதினிக்கு வயிற்றுவலி ஏற்படவே மீண்டும் அதே மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால் கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையை நாடுமாறு மருத்துவர்கள் கூறவே, அங்கு அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் போரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டதில் அனைவரும் களைந்து சென்றனர்.

Related Stories: