வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே ஜூன் 12-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே ஜூன் 12-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மதுரை கேட்ட ரயில்வே சார்பில் ஜூன் 12-ம் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  நெல்லையில் இருந்து காலை 11.15-க்கு புறப்படும் மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றுயடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: