காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலப்போர்வை போர்த்தி மரியாதை

சென்னை: காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதையை செலுத்தினார். கண்ணியதென்றல் என அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கம்மிட்டி கே.எஸ்.அழகிரி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் மலப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

Related Stories: