பஞ்சாப்பில் 4 காங். தலைவர்கள் பாஜ.வுக்கு தாவல்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜவில் இணைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜ்குமார் வெர்கா, பல்பீர் சிங் சித்து, சுந்தர் ஷாம் அரோரா மற்றும் குர்பிரீத் சிங் கன்கார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பாஜவில்  நேற்று இணைந்தனர். முன்னாள் அமைச்சர் பல்பீர் சித்து, மொகாலியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். காங்கிரஸ் அரசின் போது சுகாதார துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இதேபோல், மூன்று முறை எம்எல்ஏவான குர்பிரீத் சி்ங் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர். ராஜ்குமார் வெர்காவும் மூன்று முறை எம்எல்ஏ மற்றும் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். சுந்தர் ஷாம் அரோரா தொழிற்சாலை மற்றும் வர்த்தக துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில், மூத்த தலைவர்கள் நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷேகாவாத், மற்றும் சோம் பிரகாஷ் மற்றும் பாஜவின் மாநில பிரிவு தலைவர் அஸ்வானி சர்மா மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜவில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Related Stories: