விக்ரம் 3ம் பாகத்தில் வில்லனா? சூர்யா தகவல்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த ‘விக்ரம்’ படம் சமீபத்தில் வெளியானது. இதில் கதைப்படி வில்லன் விஜய் சேதுபதியின் மும்பை பாஸ் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். கடைசி 5 நிமிடங்கள் அவரது காட்சிகள் இடம் பெற்றது. இதையடுத்து ‘விக்ரம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகும் என்று தகவல் பரவியுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘விக்ரம்’ படத்தின் 3ம் பாகம் தயாரானால், அதையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று தெரிவித்தார். இந்நிலையில் சூர்யா தனது டிவிட்டரில், ‘அன்புக்குரிய கமல்ஹாசன் அண்ணா. எப்படி சொல்வது? உங்களுடன் திரையில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் 3ம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.

Related Stories: