கே.கே மரணத்துக்கு என்ன காரணம்? மருத்துவ அறிக்கையில் தகவல்

சென்னை: கடந்த மே 31ம் தேதி பின்னணி பாடகர் கே.கே தனது 53வது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவர் மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கே.கேவுக்கு இடது பிரதான கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பும் மற்றும் பல்வேறு தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்பும் ஏற்கனவே இருந்திருக்கிறது. நிகழ்ச்சியின்போது அவர் அதிகப்படியான உற்சாகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, பிறகு அது மாரடைப்பாக மாறி அவரது உயிரைப் பறித்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் சிபிஆர் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.

Related Stories: