என் படங்களை நானே பார்க்க மாட்டேன்: கீர்த்தி சுரேஷ்

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி: என் நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தி அளித்தது கிடையாது. நடிப்பின் மீது எனக்கு இருக்கும் அதிக ஈடுபாடு காரணமாக, இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் நினைத்துக்கொள்வேன். ஒரு நடிகையாக எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும், நான் நடிக்கும் படங்கள் வணிகரீதியாக வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பேன். வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால்தான், எனக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு நிரூபிக்க முடியும். பொதுவாக நான் நடித்த படங்களைப் பார்க்க மாட்டேன். அப்படிப் பார்த்தால், என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என்று தோன்றும். அது தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தும்.

Related Stories: