திருப்போரூர் ஒன்றியத்தில் பாமக ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன். பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியான இவர், நேற்று காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு, தொழிலாளர் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, அவருக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவருடன் பா.ம.க. ஒன்றிய துணைச் செயலாளர் சோனலூர் வி.எம்.பெருமாள், நாவலூர் தே.மு.தி.க. இளைஞர் அணிச்செயலாளர் ஜான் மற்றும் சிவசக்தி ஆகியோரும் அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவரும், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், பனங்காட்டுப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: