×

வருடாபிஷேகத்தை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயிலில் சிறப்பு யாகம்

பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் நடந்த வருடாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு யாகம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கோதைமங்கலத்தில் சண்முக நதி கரையோரம் பெரியாவுடையார் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் நேற்று வருடாபிஷேக பூஜை நடந்தது.   வருடாபிஷேகத்தையொட்டி மூலவரான சிவனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், ருத்திரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதனைத்தொடர்ந்து கோயிலின் மேற்கு பிரகாரத்தில் கொடிமரத்தின் முன்பு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் மற்றும் 108 வலம்புரி சங்கில் தீர்த்தம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி கோயில் அர்ச்சகர் ஸ்தானிகர் அமிர்தலிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியம் தலைமையிலான  சிவாசாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர் , பழனிவேல், செந்தில்குமார், சதீஷ், குமரகுருபரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



Tags : Palani Periyavudayar Temple , Special Yagya at the Palani Periyavudayar Temple on the eve of the annual festival
× RELATED பழநி பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம்