ஆசிய கோப்பையில் வெண்கலப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி: 13 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணியில் இடம்பெற்று ஆசிய கோப்பையில் வெண்கலப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் இருவருக்கு கோவில்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகியோர் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு பெற்றனர்.

கடந்த மே 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஆசியகோப்பை ஹாக்கி போட்டியில் மாரீஸ்வரன், கார்த்தி இருவரும் பங்கேற்ற இளம் வீரர்கள் கொண்ட ஹாக்கி அணி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.

வாகை சூடிய வீரர்கள் சொந்த ஊர் திரும்பியதையடுத்து அவர்களுக்கு கோவில்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் இருவரையும் வீடு வரை ஊர்வலமாக பொதுமக்கள் அழைத்து சென்று வாழ்த்தினர்.  இதையடுத்து கோவில்பட்டியில் இருவருக்கும் பல்வேறு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாராட்டும், வரவேற்புகளும் உத்வேகம் அளிப்பதாக ஹாக்கி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: