பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்.. அண்ணாமலைக்கு பதவி ஆசை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

மதுரை : அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அதிமுகவை விமர்சித்ததை சுட்டிக் காட்டி செல்லூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜு,அதிமுகவை பாஜக விமர்சித்தால் நிச்சயம் பதிலடி கொடுப்போம். ஒன்றிய அரசிடம் பதவி பெற அண்ணாமலை அரசியல் செய்கிறார். ஏற்கனவே பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை.எல்.முருகன் ஆகியோர் பதவி பெற்றத்தை போல், அண்ணாமலையும் பதவி பெற நினைக்கிறார்.

அண்ணாமலையின் செயல்பாடுகள் ஒன்றிய அரசு பதவியை குறிவைத்ததைப் போல் தான் உள்ளது. அதிமுகதான் தற்போது எதிர்க்கட்சி. ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.பிற கட்சிகள் தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தயார். நாளைக்கே தேர்தல் வைத்துக் கொள்ளலாம்.எல்லா கட்சியும் தனித்தே போட்டி இடுவோம்,என்றார்.

Related Stories: