×

கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு

விகேபுரம் : பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். அக்டோபர் 12ம் தேதி வரை 132 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாகுபடிகளில் கார் சாகுபடியே பிரதானமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இதனால் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் விவசாயிகள் அறுவடையை முடிப்பதோடு, தொடர்ந்து பிசான சாகுபடிக்கும் தயாராகி விடுவர். இந்தாண்டு கார் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று சபாநாயகர் அப்பாவு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன்மூலம் தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு  கோடைமேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்  (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய்  (12500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (6000 ஏக்கர்), பாளையங்கால்வாய்  நேரடி  பாசனம் (6200 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் நேரடி பாசனம் (2525 ஏக்கர்)  ஆகிய மொத்தம் 32,815 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு  அக்டோபர் 12ம் தேதி வரை 132 நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, கலைஞர் பிறந்த நாளில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தண்ணீர் நேற்று முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு 600 கன அடி வீதம் திறந்து விடப்படும். தொடர்ந்து தேவைக்கேற்ப அக்டோபர் 12ம்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை கலெக்டர் விஷ்ணு, எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையா, ரூபி மனோகரன், அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், தாமிரபரணி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து, முருகன்,  பொறியாளர்கள் ரமேஷ்குமார், மகேஸ்வரன், வினோத்குமார், பாபநாசம் அணை பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், அழகுமுத்து, முத்துகிருஷ்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விகேபுரம் நகராட்சித் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், திமுக நகர செயலாளர் கணேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல், முன்னாள் நகராட்சி தலைவர் மாரியப்பன் மற்றும் திமுகவை சேர்ந்த பீட்டர் சுவாமிநாதன், முத்துராமலிங்கம், பிரபாகரன், நெடுஞ்செழியன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், நகர அவைத்தலைவர் அதியமான், மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டியன், தொமுச செயலாளர் மதிவாணன், தொமுச பாண்டியன், கவுன்சிலர்கள் செல்வகுமாரி, இயேசுராஜா, குட்டிகணேசன், அதிமுக நகர செயலாளர் கண்ணன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து, மீனாட்சிசுந் தரம், அம்பை ஒன்றிய துணைச்செயலாளர் பிராங்கிளின், வக்கீல் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Papanasam Dam , Papanasam Dam,Water
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்