×

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை :  வைகாசி விசாக திருவிழாவிற்கு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஜூன் 12 அன்று ஒரு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி - திருச்செந்தூர் விரைவு சிறப்பு ரயில்  திருநெல்வேலியில் இருந்து  காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில்  திருச்செந்தூரிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த  ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர்  மற்றும் திருச்செந்தூர் - திருநெல்வேலி  விரைவு ரயில்களில் ஜூன் 9 முதல் ஜூன் 13 வரையும் திருநெல்வேலி - திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு -  திருச்செந்தூர்  விரைவு ரயில்களில் ஜூன் 8 முதல் ஜூன் 12 வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.

கடையநல்லூரில் நின்று செல்லும் :

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 9 முதல் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று மீண்டும் இரவு 8.56 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜூன் 10ம் தேதி புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று ‌மீண்டும் அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும். இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Tirunelveli ,Thiruchendur ,Vaikasi Visakha Festival , Vaikasi Visagam,Tirunelveli,Thiruchendur,Passenger train
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...