×

தஞ்சை, நெல்லை கோயில்களில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் தமிழகம் வந்தன!!

சென்னை : ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் அடையாளம் கண்டு சமீபத்தில் ஒன்றிய அரசு மீட்டது. மீட்கப்பட்ட 10 சாமி சிலைகளை கடந்த 1ம் தேதி தமிழக அரசிடம் ஒன்றிய அரசு ஒப்படைத்தது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 10 சாமி சிலைகளையும் டெல்லி சென்று பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, துவாரபாலகர், நடராஜர், சிவன், பார்வதி, விஷ்ணு, குழந்தை பருவ சம்மந்தர் , விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் உள்ளிட்டட் 10 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜராம், அசோக் நடராஜன் டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டு வந்தனர். சென்னை வந்தடைந்த இந்த சாமி சிலைகள் தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் என்று கண்டறிப்பட்டுள்ள நிலையில், 10 சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நீதிமன்றம் மூலமாக 10 சாமி சிலைகளும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.


Tags : Sami ,Tanjore ,Nellai ,USA ,Australia ,Tamil Nadu , Tanjore, Nellai, Temple, USA, Australia
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...