×

மெக்சிகோவில் ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைத்த மக்கள்; பொம்மைத் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் சிறார்களுக்கும் பரிசு!!

மெக்சிகோ : அதிகரித்து வரும் ஆயுத கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த மெக்சிகோ அரசு மேற்கொண்டுள்ள வித்தியாசமான விழிப்புணர்வு திட்டத்திற்கு அந்நாட்டு மக்களிடையே குறிப்பாக சிறார்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க முடிவெடுக்க மெக்சிகோ நிர்வாகம் விதிகளை மீறி வீடுகளில் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்க அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தது. இதையடுத்து மக்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். முதல் நாளிலேயே தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மட்டும் 6,000த்திற்கும் அதிகமான துப்பாக்கிகளை மக்கள் அரசிடம் ஒப்படைத்தனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் உடனடியாக இயந்திரங்கள் மூலம் துண்டு துண்டாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இந்த நிலையில் சிறார்களின் மனதில் இருந்து வன்முறை எண்ணங்களை நீக்கும் முயற்சியாக பொம்மை துப்பாக்கிகளை ஒப்படைப்போருக்கு பரிசு வழங்கப்படும் என ராணுவம் அறிவித்தது. இதையடுத்து சிறார்கள் வரிசையில் நின்று தங்களிடம் இருந்த விதவிதமான விளையாட்டு துப்பாக்கிகளை அதிகாரிகளிடம் ஒபபடைத்துவிட்டு அதற்கு மாற்றாக புத்தகங்கள், மின் பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான மெக்சிகோவிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருகி வருவதை அடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மெக்சிகோ இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 


Tags : Mexico , Mexico, weapons, toys, guns, minors
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...