திருக்கோவிலூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம் இறந்த தந்தையின் மெழுகு சிலை முன் நடந்த மகளின் திருமணம்

திருக்கோவிலூர்: இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது கணவர் செல்வராஜ்(56). கடந்தாண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். இந்நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், ஜெயராஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். இதனால், பத்மாவதி குடும்பத்தினர் ரூ.5 லட்சம் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். பட்டு வேட்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகு சிலையை தத்ரூபமாக உருவாக்கினர்.இந்த சிலையை வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜின் மெழுகு சிலையை பார்த்து கண்ணீர் விட்டார். இதை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: