ஐவர் ஹாக்கி உலக கோப்பை இன்று லாசேனில் தொடக்கம்

லாசேன்: ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக, அணிக்கு தலா 5 பேர் மட்டுமே பங்கேற்கும்  ‘ஐவர் ஹாக்கி உலக கோப்பை’ தொடர் சுவிட்சர்லாந்தின் லாசேனில் இன்று தொடங்குகிறது.கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளில் அணிக்கு  தலா 11 பேர்  விளையாடுவது வாடிக்கை. ஐவர் கால்பந்து, எழுவர் கால்பந்து போட்டிகள் ஏற்கனவே அறிமுமாகி ஓரளவு பிரபலமாகியும் உள்ளன. ஆனால்,  ஹாக்கியில்  சமீபத்தில்தான்  ஐவர் ஹாக்கி அறிமுமானது. தற்போது உலக கோப்பை போட்டியும் நடைபெற உள்ளது. இதில் வீரர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, டி20 போல போட்டிக்கான  நேரமும் 3ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

லாசேனில் மகளிர், ஆடவர் பிரிவுகளில் நடக்கும் இந்த தொடரில்   தலா 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தையும், மகளிர் அணி  தனது முதல் ஆட்டத்தில் உருகுவேயையும் எதிர்கொள்கிறது.

இந்த வித்தியாசமான தொடர் ஹாக்கி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ஆண்கள் அணி: பவன்,சஞ்ஜெய், மன்தீப், குரீந்தர் சிங் (கேப்டன்),  சுமித் (துணை கேப்டன்),  ரபிசந்திரா, தல்பிரீத், முகமது ரஹீல், குர்சாஹிப்ஜித்மாற்று வீரர்கள்: பிரசாந்த், பாபி சிங், சுதீப்.இந்திய மகளிர் அணி: ரஜனி(கேப்டன்), ரஷ்மிதா, அஜ்மினா, வைஷ்ணவி, மஹிமா, பிரீதி, மரியஅனா, மும்தாஜ், ருதாஜா.மாற்று வீராங்கனைகள்: சுமன் தேவி, ரஜ்வீந்தர் கவுர்.ஆண்கள் பிரிவில் களமிறங்கும் அணிகள்: இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து. மகளிர் பிரிவில் களமிறங்கும் அணிகள்: இந்தியா, போலந்து, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, உருகுவே

Related Stories: