169 குடும்பங்களுக்கு ரூ86 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியத்தில் இருளர், ஆதிதிராவிடர், இதர இன மக்கள் என 169 குடும்பங்களுக்கு ரூ86 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி 169 குடும்பங்களுக்கு ரூ86 லட்சத்து 71 ஆயிரத்து 986 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.பர்கத்துல்லாகான், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், வேலு, இளைஞர் அணி என்.டி.சுகுமாரன், ஊராட்சி தலைவர்கள் டி.டி.தயாளன், கே.கே.சொக்கலிங்கம், சீனிவாசன், வெள்ளியூர் ஊராட்சி துணை தலைவர் டி.முரளிகிருஷ்ணன், புன்னைகுமார், பி.சண்முகம் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் வெங்கத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர் நன்றி கூறினார்.

Related Stories: