×

சென்னை சிந்தாதிரிப்பேட்டை உள்பட 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் 33 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தி.நகர் மதுவிலக்கு பிரிவில் இருந்த கண்ணன் ராயப்பேட்டை சட்டம்- ஒழுங்குக்கும், நீலாங்கரை குற்றப்பிரிவில் இருந்த கமலக்கண்ணன் தலைமை செயலக காலனி சட்டம் -ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் கோடம்பாக்கம் சட்டம் -ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இசக்கி பாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஞானபிரகாசி நந்தம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், புளியந்தோப்பு சட்டம் -ஒழுங்கில் இருந்த வேலு வேப்பேரி சட்டம் -ஒழுங்குக்கும்,

கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் இருந்த செல்லப்பா பரங்கிமலை சட்டம்- ஒழுங்குக்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமன் புளியந்தோப்பு சட்டம்- ஒழுங்குக்கும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம் -ஒழுங்குக்கும்,  அண்ணாநகர் சட்டம்- ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபு கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த கோபாலகுரு அண்ணாநகர் சட்டம் -ஒழுங்குக்கும், புழல் சட்டம்- ஒழுங்கில் இருந்த சீனிவாசன் மதுரவாயல் குற்றப்பிரிவுக்கும், மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த சரவணபிரபு திருவொற்றியூர் சட்டம் -ஒழுங்குக்கும், மனநல காப்பக மருத்துவமனை-1ல் இருந்த வாசகி ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவுக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை -1ல் இருந்த ராஜலட்சுமி சேத்துப்பட்டு குற்றப்பிரிவுக்கும், ஹாக்னி கேரியேஜியில் இருந்த மாலதி அரும்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், வண்ணாரப்பேட்டை சட்டம்- ஒழுங்கில் இருந்த பிராவின் டேனி மீன்பிடி துறைமுகம் சட்டம் -ஒழுங்குக்கும்,

எம்சிஆர் பிரிவில் இருந்த ஆரோக்கிய மேரி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஐயூசிஏடபிள்யூ பிரிவில் இருந்த அகிலா காத்திருப்போர் பட்டியலுக்கும், குமரன் நகர் குற்றப்பிரிவில் இருந்த பொன்ராஜ் குமரன் நகர் சட்டம் -ஒழுங்குக்கும், சாஸ்திரி நகர் குற்றப்பிரிவில் இருந்த ராஜாராம் சிந்தாதிரிப்பேட்டை சட்டம் -ஒழுங்குக்கும், பாதுகாப்பு பிரிவில் இருந்த ராஜ்பாபு நுண்ணறிவு பிரிவுக்கும், ஏழுகிணறு குற்றப்பிரிவில் இருந்த செந்தில் வடிவேலு நுண்ணறிவுப் பிரிவுக்கும், ராயபுரம் குற்றப்பிரிவில் இருந்த பூபாலன் சூளைமேடு சட்டம்  -ஒழுங்குக்கும், சேத்துப்பட்டு சட்டம் -ஒழுங்கில் இருந்த புகழேந்தி நீலாங்கரை குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலை போக்குவரத்து புலானாய்வு பிரிவில் இருந்த பழனி தரமணி சட்டம் -ஒழுங்குக்கும்,

சூளைமேடு சட்டம் -ஒழுங்கில் இருந்த  வெற்றிசெல்வன் சேத்துப்பட்டு சட்டம் -ஒழுங்குக்கும், புழல் குற்றப்பிரிவில் இருந்த சோபா ேதவி புழல் சட்டம் -ஒழுங்குக்கும், தரமணி சட்டம் -ஒழுங்கில் இருந்த ராமலிங்கம் சாஸ்திரி நகர் குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலையில் இருந்த ஜோகிம் ஜெர்ரி  சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், கொருக்குபேட்டை குற்றப்பிரிவில் இருந்த தவமணி வண்ணாரப்பேட்டை சட்டம் -ஒழுங்குக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Sinthadripet ,Shankar Jiwal , Chintadripet, Inspectors, Change of Workplace, Commissioner of Police Shankar Jiwal,
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...