காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் அவரின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் அவரின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சோனியா காந்தி தனதுவீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு சில நாட்களுக்குப்பின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வெளியிட்ட கருத்தில், தனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அதற்கான சோதனை மேற்கொண்ட பொழுது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் முதற்கட்டமாக தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சமீபத்தில் என்னுடன் தொடர்புகொண்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டார். 

Related Stories: