×

சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!: சென்னை விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள்.. விமான சீரமைப்பு பணிகள் தீவிரம்..!!

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 98 பயணிகளுடன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு 9.45 மணிக்கு, விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில், 98 பயணிகள் உட்பட மொத்தம் 104 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கியதும், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து ஓடுபாதையிலேயேயே விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், இழுவை வாகனம் மூலம் அந்த விமானம் இழுத்து வரப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானம் புறப்பட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தொடர்ந்து, இயந்திர கோளாறு ஏற்பட்ட விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும், விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். ஆனால், விமானத்தை பழுது பார்க்கும் பணி முடிவடையாததால், அதிகாலை 4 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர்.

அதன் பிறகு, 4 மணிக்கும் விமானம் புறப்படாததால், விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, இன்று பகல் 12 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரம் ஆகியும் தற்போது வரை விமானம் சரிசெய்யப்படாததால் பயணிகள் அனைவரும் அங்கேயே தங்கியுள்ளனர். விமானம் 1 மணியளவில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமானத்தை பழுதுபார்க்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Singapore ,Chennai Airport , Singapore, flight, engine malfunction, Chennai airport, passengers
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...