×

தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் ஏழைகளுக்காக கொண்டாடிய தலைவர்தான் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் ஏழைகளுக்காக கொண்டாடிய தலைவர்தான் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது  பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும் என கூறினார்.

தமிழ்நாட்டில் கை ரிக்ஷா இல்லாததற்கு காரணம் கலைஞர்தான். சைக்கிள் ரிக்ஷக்களை இலவசமாக வழங்கினார் கலைஞர். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர். தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் ஏழைகளுக்காக கொண்டாடிய தலைவர்தான் கலைஞர் என்று பெருமிதம் தெரிவித்தார். நான்தான் முதல்வர் என கூறிக்கொண்டு இன்றைக்கு கட்சி தொடங்குகிறார்கள். மக்களுக்கு பணியாற்றவே 1949ல் திமுக தொடங்கப்பட்டது.

கட்சி தொடங்கும்போதே முதலமைச்சர் ஆவோம் என கூறிவிட்டு கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கி 8 ஆண்டுகள் எந்த தேர்தல்களையும் சந்திக்காமல் இருந்தோம். 1957ல் 15 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவையில் நுழைந்தோம். 1962ம் ஆண்டு எதிர்கட்சியானது திமுக. பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்தான் திமுக. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் வல்லமை பெற்ற இயக்கம் திமுக என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.


Tags : Chief Minister ,BC ,K. Stalin , Birthday, poor, leader, artist, MK Stalin
× RELATED நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்