இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்

கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பற்றாக்குறையாக இருக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யாவிடில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தற்போது 12 முதல் 20 நாட்கள் வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உதவாதவை என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் கூட ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் கூட இல்லாத நிலை உள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சூழல் சரியாகாவிட்டால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு பல நோயாளிகள் இறக்க நேரிடும் என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Related Stories: