×

காஞ்சிபுரத்தில் இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி சார்பில், தமிழக முன்னாள் முதல்வர்கலைஞரின்  99வது பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் சாலவாக்கம் ஒன்றியம், உத்திரமேரூர் ஒன்றியம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம், மதுராந்தகம் நகரம், சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி, ஆதரவற்றவர்களுக்கு ஏழை, எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திமுக கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

Tags : Kangipuram , Today is the artist's 99th birthday in Kanchipuram
× RELATED காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள்...