×

ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, : நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். புதிதாக தேர்வான நடிகர் சங்க நிர்வாகி கள், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். இந்நிலையில், நேற்று பகல் போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்றனர். அவர்கள் ரஜினியுடன் அரை மணி நேரம் சிக்கொண்டிருந்தனர். பிறகு வெளியே வந்த நிர்வாகிகள், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நடிகர் சங்க அலுவலக கட்டிட வேலைகள் தொடர்பாக ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்’ என்று தெரிவித்தனர். தற்போது நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணம் திரட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டம் உள்ளது என்று பொதுச்செயலாளர் விஷால் கூறியிருந்தார். இதுதொடர்பாக நிர்வாகிகள் ரஜினியிடம் பேசியதாக கூறப்படுகிறது.

Tags : Rajini , Actors' Union executives meet Rajini
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...