அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கு முரண்பாடான கொள்கைகள் கொண்டது பாஜ: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி

கோவில்பட்டி : அதிமுகவுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கும் முரண்பாடான கொள்கை கொண்டது பாஜ என்று முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கூறினார்.இதுதொடர்பாக  அவர், கோவில்பட்டியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில்  எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜவுடன் அதிமுக  இணைந்திருந்தாலும் கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. எங்களுக்கு  மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் முரண்பாடான கொள்கைகளை பாஜ கொண்டுள்ளது  என்று அனுபவத்தின் வாயிலாக பொன்னையன் தெரிவித்துள்ளாரே தவிர அதிமுகவிற்கும்  பாஜவிற்கும் எதிரான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை. அதிமுகவில்  மாவட்ட செயலாளர்களுக்கு என்றுமே அதிகாரம் உண்டு. இது ஜனநாயக கட்சி.  சசிகலாவை பாஜவில் இணைய அழைப்பு விடுத்தவர்களிடம்தான் அதுகுறித்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: