×

அமெரிக்காவில் பயங்கரம் பிரபல மருத்துவமனைக்குள் நுழைந்து 4 நோயாளிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: தாக்குதல் நடத்தியவரும் பலி

துல்சா: அமெரிக்காவில் மருத்துவமனை கட்டிடத்தின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் இறந்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் 18 வயது இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியாகினர். துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளில் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருக்கெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கடும் கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்துக்குள் ஒரு மர்மநபர் நேற்று வந்தார். அவர், திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மருத்துவமனை வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மருத்துவமனையின் ஒரு அறையாக போலீசார் சோதனை நடத்தினர். வேறு யாரோனும் மர்ம நபர்கள் பதுங்கியிருக்கிறார்களா என தேடினர். யாரும் இல்லை என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை துணைத் தலைவர் ஜொனாதன் ப்ரூக்ஸ் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் உடலையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது, துப்பாக்கி சூடு நடத்தியவர் எப்படி இறந்தார் என்பது குறித்த உடனடியாக கண்டறிய முடியவில்லை’ என்றார். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்த மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்ததாகவும்  போலீசார் கூறினர்.

Tags : Terriram Celebrity Hospital ,United States , USA, Celebrity Hospital, Patients shooting,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!