காங். நிர்வாகியை தாக்கிய ரேஷன் ஊழியர் கைது

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி (51). வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளராக உள்ளார். திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையின் ஊழியர், தங்களுக்கு தரவேண்டிய உணவு பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரவிக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பர் என ரவி உறுதியளித்தார்.

இதை பார்த்து ராயபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சார்லஸ் கோபி (43) என்பவர் ரவியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ரேஷன் கடை ஊழியர் சார்லஸ் சுத்தியலால் ரவியை சரமாரி தாக்கியிருக்கிறார். இதில் அவரது தாடை மற்றும் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்து ரவி தப்பி சென்று தனியார் மருத்துவமனையில் ரவி சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் கடை ஊழியர் சார்லஸ் கோபியை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: