×

ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர்கங் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசினர். புதிதாக தேர்வான நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். இந்நிலையில் இன்று பகல் போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்றனர். அவர்கள் ரஜினியுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த நிர்வாகிகள், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தனர். நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணம் திரட்ட, கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமுள்ளது என பொதுச் செயலாளர் விஷால் கூறியிருந்தார். இது தொடர்பாக நிர்வாகிகள் ரஜினியிடம் பேசியதாக கூறப்படுகிறது.

Tags : Actors' Union ,Rajini , Rajini, Actors Guild Executives, Meeting
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...