×

பிரபல இசையமைப்பாளர் வங்கி கணக்கில் பணம் மோசடி

திருவனந்தபுரம்: பிரபல மலையாள இசையமைப்பாளர் ராகுல்ராஜ் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள இசை அமைப்பாளர் ராகுல்ராஜ். திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று தற்செயலாக வங்கி கணக்கை பரிசோதித்தார். அப்போது அதில் ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ரூ.600, ரூ.700, ரூ.6000, ரூ.7000 என்று பல தவணைகளாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி அதிகாரியிடம் புகார் கொடுத்தார். விசாரணையில் பல்வேறு நாடுகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பணம் எடுக்கும்போது ஒடிபி எண்ணும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post பிரபல இசையமைப்பாளர் வங்கி கணக்கில் பணம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Rahulraj ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...