×

மூவலூர் நீர் ஒழுங்கி பகுதியில் கரை அரிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மூவலூர் நீர் ஒழுங்கி பகுதியில் பாலம் கட்டுமான இடத்தில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாக்கும் பணியில் நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் மே மாதம் 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நள்ளிரவு காவிரி கடலுடன் கலக்கும் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் எல்லையை தண்ணீர் வந்தடைந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாலங்காடு கதவணை பகுதியில் இருந்து காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே மூவலூர் என்ற இடத்தில் காவிரி ரெகுலேட்டர் (நீர் ஒழுங்கி) ஆறு மதகுகளுடன் அமைந்துள்ளது.

இப்பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணி 2018ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி இந்த ஆண்டு மீண்டும் முழுவீச்சில் துவங்கியது. தண்ணீர் வருவதற்குள் பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கலெக்டர் லலிதா அறிவித்திருந்தார் இந்நிலையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், பாலம் கட்டுவதற்காக காவிரி ஆற்றின் இடது கரையில் 100 மீட்டர் அளவிற்கு கரை துண்டிக்கப்பட்டு இருந்தது.தற்போது காவிரி ஆற்றில் 800 கனஅடி வரை தண்ணீர் செல்வதால் முழுவீச்சில் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

இதனால் கரை துண்டிக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே புகும் நிலைமை ஏற்பட்டலாம் என்பதால் வட கரை பக்கம் உள்ள இரண்டு மதகுகளை அடைத்து மீதமுள்ள நான்கு மதகுகள் வழியே தண்ணீர் செல்லும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் தண்ணீர் வேகம் காரணமாக இடது கரையில் மண்ணரிப்பு ஏற்பட துவங்கியது. இதனைத் தொடர்ந்து கரையில் மண் மூட்டைகளை அடுக்கியும் தடுப்பு பலகைகள் அமைத்தும் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Movalur , Public Works Department intensifies to prevent bank erosion in Muvalur water regulation area
× RELATED மூவலூர் நீர் ஒழுங்கி பகுதியில் கரை...