தமிழகம் மாளிகை பூங்காவில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்

ஊட்டி:  ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் சூரிய காந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தமிழக அரசின் இல்லமான தமிழகம் ஆய்வு மாளிகை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இந்த மாளிகையில் தங்கி செல்வது வழக்கம். மேலும் முக்கியமான ஆய்வு கூட்டங்கள் இங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த மாளிகை வளாகத்தில் புல் மைதானத்துடன் கூடிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீசனை முன்னிட்டு தமிழகம் மாளிகை பூங்காவில் பல்வேறு வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவ்வாறு மாளிகையின் பல பகுதிகளிலும் நடவு செய்யப்பட்ட சூரிய காந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை இங்கு வரக்கூடிய அலுவலர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பார்த்து செல்கின்றனர்.

Related Stories: