×

தொடர் கனமழை எதிரொலி பூக்கள் அழுகி பொலிவிழந்த குன்னூர் சிம்ஸ் பூங்கா

குன்னூர்:  குன்னூர் சிம்ஸ் பூங்கா தொடர் மழையால்  பூக்கள் அழுகி பொலிவிழந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே சீசனுக்காக 3  லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்கியது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன மழையுடன் கடும் குளிர் நிலவுவதால்  பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்  இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  குன்னூர் தொடர் மழையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள டேலியா, சால்வியா, மெரிகோல்டு, கார்னீஷன் உட்பட 50க்கும் மேற்பட்ட  வகை மலர்கள் அழுகியுள்ளன. பல லட்சம் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து பரவசப்படுத்திய இந்த பூங்கா பொலிவிழந்து காட்கி அளிக்கிறது.

Tags : Coonoor Sims Park , Echo of continuous heavy rain Coonoor Sims Park with rotten flowers
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது