×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி சார்பில் முன்னாள்  முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா நாளை காலை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது. சாலவாக்கம் ஒன்றியம், உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியம், பேரூர், காஞ்சிபுரம் மாநகரம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம், மதுராந்தகம் நகரம், சித்தாமூர் கிழக்கு ஒன்றியம்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஆதரவற்ற ஏழை, எளியோருக்கு அறுசுவை உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல், மரக்கன்று நடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூர், லத்தூர் தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம், கருங்குழி பேரூர், லத்தூர் வடக்கு ஒன்றியம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம், சித்தாமூர் மேற்கு ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 4ம் தேதி முதல் 15ம்தேதி வரை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் மருத்துவ முகாம்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளது.


Tags : Kanchipuram ,South District ,DMK ,K. Sundar , Kanchipuram South District DMK, Artist's 99th Birthday Celebration, K. Sundar MLA,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...