பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன் :பாஜகவில் இணைய உள்ள ஹர்திக் படேல் ட்வீட்

டெல்லி : பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் என ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு படிதார் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நபர்களுள் ஒருவர் ஹர்திக் படேல். இதையடுத்து அவர், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் ஹர்திக் படேல் வெளியேறினார். இந்நிலையில் ஹர்திக் படேல் பாஜவில் இணையப் போவது உறுதியாகி உள்ளது. ஹர்திக் படேல் இன்று பாஜவில் இணைய இருப்பதாக அம்மாநில பாஜ மூத்த தலைவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பூஜைகளை ஹர்திக் படேல் இன்று காலை மேற்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. 9இந்த நிலையில் ஹர்திக் படேல் இந்தியில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.அதில், ”நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: