×

சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்.. பள்ளி, மாவட்டத்திற்காக ஆடுவதன் மூலமே பெரிய அளவில் ஒரு வீரர் ஜொலிக்க முடியும்: தோனி பேச்சு

திருவள்ளூர் : சென்னையை தான் இன்னொரு வீடாக நினைப்பதாகவும் ஒரு வீரர் தனது மாவட்டத்திற்காகவும் பள்ளிக்காகவும் ஆடுவதன் மூலமே பெரிய அளவில் ஜொலிக்க முடியும் என்றும் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி இளைஞர்களுக்கு நம்பிகை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தோனி, பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தோனி, பள்ளி மற்றும் மாவட்டங்களுக்கான பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தாமும் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் இருந்தே இந்த அளவுக்கு உயர்ந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், பள்ளிக்காக விளையாடுவதன் மூலமே மாவட்ட அணிக்குத் தேர்வாக முடியும்.மாவட்ட அணிக்கு பங்களிப்பதன் மூலம் மட்டுமே மாவட்ட ரஞ்சி கோப்பை போட்டிகள் மாதிரி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.மாவட்டம், பள்ளிகளுக்காக ஆடுவதால் மட்டுமே இந்தியாவுக்காக பங்களிக்க முடியும். நான் பள்ளிக்காக, மாவட்டத்திற்காக ஆடி இருக்காவிட்டால் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பை பெற்று இருக்க முடியாது,என்றார்.

25வது ஆண்டு விழாவை கொண்டாடும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், 50ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐபில், இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் தோனி கேட்டுக் கொண்டார்.


Tags : Chennai ,DONI , Chennai, School, District, Dhoni
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...