ரூ97 லட்சம் மோசடியில் கைதான வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் சஸ்பெண்ட்

வேலூர் : வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-19ல் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் தணிக்கை நடத்தினர். இதில் மகளிர் சுய உதவிகுழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பயனாளர்கள் பெயரில் ₹97 லட்சம் கடன் வழங்கி மோசடி செய்திருப்பதும், இ து தொடர்பாக கிளை மேலாளர் உமாமகேஸ்வரியை வணிக  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் உமாமகேஸ்வரி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: