பாஜவில் சசிகலாவை சேர்க்க முயற்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை : பாஜவில் சசிகலாவை சேர்க்க தீவிரமாக முயற்சிகள் செய்து வருவதாக புதுக்கோட்டையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும். அதிமுகவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜவில் சேர்ந்தால் நாங்கள் சசிகலாவை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் இதுகுறித்து திருச்சியில் தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டியில், ‘சசிகலாவை பாஜவில் இணைப்பது குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து. பாஜவின் கருத்து இல்லை. பாஜவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். குறிப்பிட்ட சிலர் (சசிகலா) இணைவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: