ஐரோப்பிய யூனியன் 90% தடைகளை விதிக்க முடிவு: ரூ31 லட்சம் கோடிக்கு எரிவாயு ரஷ்யாவுடன் சீனா ஒப்பந்தம்: கடுப்பில் அமெரிக்கா

பீஜிங் : ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் 90% தடைகளை விதிக்க முடிவு செய்துள்ள நிலையில், ரூ31 லட்சம் கோடிக்கு எரிவாயு வாங்க சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோ கூட்டமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 3 மாதத்தை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றி உள்ள ரஷ்யா, தொழில்துறை நகரமான கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்நிலையில்,இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90% எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்து உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் கூட்டமைப்பு 25% எண்ணெய் மற்றும் 40% இயற்கை எரிவாயு ஆகியவற்றிற்கு ரஷ்யாவை நம்பி உள்ளது.

பல்வேறு தடைகளை விதித்த அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதே நேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் இதுவரை இல்லாத வகையில் உச்சப்பட்ச எண்ணெய் வர்த்தகத்தை செய்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கை படி, கடந்த ஆண்டு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 20% சீனா வாங்கியது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்னதாக, பிப்ரவரி 4ம் சீனா-ரஷ்யா இடையே அடுத்த 30 ஆண்டுகளில் ரூ31 லட்சம் கோடிக்கு எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து ஏப்ரல் மாதத்தில் 56.6% அதிகரித்து ₹68,975 கோடிக்கு இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை ₹7.44 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்து உள்ளது. உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் 3வது இடத்தில் உள்ள இந்தியா, குறைந்த விலையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக வாங்குகிறது. அமெரிக்காவின் இரண்டு எதிரிகளும் (ரஷ்யா, சீனா) எண்ணெய் வர்த்தகத்தில் கூட்டாளியாக இருப்பதும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் எண்ணெயை இறக்குமதி செய்வதும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Related Stories: