×

அரையிறுதியில் ஸ்வியாடெக்: கசட்கினா முன்னேற்றம்

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (28 வயது, 11வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நடப்பு சீசனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக பெற்ற 33வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா (25 வயது, 20வது ரேங்க்) 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் சக வீராங்கனை வெரோனிகா குதெரிமதோவாவை (25 வயது, 29வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு கசட்கினா முதல் முறையாக முன்னேறி உள்ளதுடன், நடப்பு பிரெஞ்ச் ஓபனில் இதுவரை ஒரு செட்டை கூட இழக்காமல் அசத்தி வருகிறார். அரையிறுதியில் ஸ்வியாடெக் - கசட்கினா மோத உள்ளனர்.

Tags : SwiTech ,Kasatkina , SwiTech in the semifinals: Kasatkina progress
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்