×

காஞ்சிபுரத்தில் ஜமாபந்தி தொடக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.ஜமாபந்தி என அழைக்கப்படும் வருவாய் தீர்வாயம் வருவாய்த்துறை மூலம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படும். இதையொட்டி, காஞ்சிபுரம் வட்டம் திருப்புக்குழி, சிறு காவேரிப்பாக்கம், கோவிந்தவாடி அகரம், பரந்தூர், சிட்டியபாக்கம், மற்றும் காஞ்சிபுரம் உட்கோட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் உள்ள 114 கிராமங்களில் உள்ள பொதுமக்கள், வருவாய்த் துறை சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி எம்எல்ஏ எழிலரசன், ஆர்டிஓ ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில், திருப்புக்குழிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், சப் டிவிஷன் அனுபவ பாத்தியம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அந்த மனுக்கள் முழுவதும் கணினியில் பதிவேற்றம் செய்து, முறையான ஆய்வுக்கு பின் தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்தார்.முகாமில் சிறப்பு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சத்தியா,  வட்ட குடிமை பொருள் வழங்கல் அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jamabandhi ,Kanchipuram ,MLA , Jamabandhi start in Kanchipuram: MLA participation
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...