ஆரணி அருகே சின்னம்பேடு ஊராட்சியில் ரு23 லட்சத்தில் கூட்டுறவு கடன் சங்க கட்டிடம்: எம்எல்ஏ.துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை : ஆரணி அருகே சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் ரு23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தனஞ்செழியன் தலைமை வகித்தார். சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கடன் சங்க செயலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில், ஊராட்சி மன்றத்தலைவர் ஜான்சி ராஜா, துணை தலைவர் சேகர், கூட்டுறவு கலால் அலுவலர் இளையராஜா, இயக்குனர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன், முன்னாள் தலைவர்கள் பார்த்தசாரதி, கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: