×

பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம்

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா நாளை (ஜூன் 3) வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது‌.  இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமையில் பொதட்டூர்பேட்டையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கலைஞரின் பிறந்த நாள்  அனைத்து கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடி ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி வைத்து கல்வெட்டுக்கள் திறக்க வேண்டும் என்றும் 30 நாட்களும் கலைஞர் பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒன்றிய செயலாளர் பங்களிப்பாக ₹ 10,000 வீதம் உதவி செய்யப்படும் என்று ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தெரிவித்தார்.

Tags : Pallipattu Union DMK , Pallipattu Union DMK executives meeting
× RELATED பள்ளிப்பட்டு பகுதியில் திமுக திண்ணை பிரசாரம்