×

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது. வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பரிசோதனைக்கு ஏற்ப தொற்று உறுதியானவர்கள் சதவீதம் 5ஆக உயரும் பட்சத்தில் பரிசோதனை எண்ணிக்கையை தீவிரப்படுத்தும் மருத்துவ கட்டமைப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வருகிற 12ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்த தவறியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தொற்று பரவலை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Chennai ,Chengalpattu ,Public Welfare Secretary , Corona spread again in Chennai and Chengalpattu districts: Public Welfare Secretary Information
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது