×

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல்: யோகி ஆதித்யநாத் நாட்டினார்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 2023ம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் எனவும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா கூறினார்.

மேலும், கோயில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணி முழுமையடைந்ததும், கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் கோயிலுக்குள் ராமர் சிலை நிறுவப்படும் எனவும், அதன்பின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Ayodhya Ram Temple Sanctuary ,Yogi , Ayodhya Ram Temple, Foundation stone for the sanctum sanctorum, Yogi Adityanath,
× RELATED 2 கோடி பார்வைகளை தொட்ட கங்குவா