பதவி நீக்கப்பட்ட இம்ரான் கான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்: முன்னாள் பிரதமரின் மகள் விமர்சனம்..!

இஸ்லாமாபாத்: பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர் என்று முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகளான பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஒரு கும்பலுக்கு தலைவர்; தீவிரவாதிகளை விட ஆபத்தானவர். அவரது அரசியல் பிரசாரம் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. தனது கட்சி தொண்டர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றார்.

ஆனால் அவரது பேரணிகளில், ஒரு நபர் கூட ஆயுதங்களுடன் வரவில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை செய்ய அவர் விரும்பினால், அவரது முகத்தில் இருக்கும் உண்மையான அரசியல் திரை அகற்றப்படும். அப்போது அவர் தீவிரவாதியை போல் நடத்தப்படுவார். அவரது சதிவேலைகளை முறியடிப்போம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர், உண்மையாக போராடவில்லை. இம்ரான் கானுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ என்று காட்டத்துடன் பேசினார்.

Related Stories: