இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்: மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்

டெல்லி: நாட்டிலேயே தமிழகத்தில் தான் கோயில்கள் அதிகம் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா தளங்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என தமிழக அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: