×

பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதிக்கு வைகை அணையை நாளை முதல் திறக்க உத்தரவு

சென்னை: பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதிக்கு வைகை அணையை நாளை முதல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரை 02.06.2022 முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43244 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Vaigai Dam ,Bipoka ,Periyaru Main Canal Irrigation Area , Order to open Vaigai Dam from tomorrow for dual irrigation area under Periyar main canal irrigation area
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு